ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் சார்பில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டம்!

கோவை ஆவாரம்பாளையத்தில் ‘எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை’ நடத்தும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் அமைப்பு இணைந்து, போன் சார்க்கோமா எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடையும் வகையில் ‘ப்ளாசம்’ என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டம் ஆட்டிடியூட் அறக்கட்டளை மற்றும் கார்டன் ப்ளூ பிராபர்டீஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.